ETV Bharat / state

'மாப்ள... இனி மதுரையில எல்லா ஏரியாவும் நம்ம கையில' - மதுரை வரைபடத்தை வெளியிட்ட இன்டாக் அமைப்பு! - மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதுரையின் வரைபடத்தை குறிப்புகளோடு, இன்டாக் அமைப்பு மதுரைப் பிரிவு வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 28, 2023, 9:48 PM IST

Updated : Mar 28, 2023, 10:49 PM IST

மதுரை வரைபடத்தை வெளியிட்ட இன்டாக் அமைப்பு!

மதுரை: ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட பெருநகரமாய்த் திகழும் மதுரையிலும், மதுரையைச் சுற்றியும் பார்ப்பதற்கு உகந்த பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதனை எவ்வாறு சென்று பார்ப்பது என்பதில் புதிதாய் வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் குழப்பங்களை போக்கும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் மதுரைப் பிரிவு மதுரையின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த புதிய வரைபடம் ஒன்றை இன்று வெளியிட்டது.

இதுகுறித்து இன்டாக் மதுரை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ''இன்று மதுரையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளோம். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அச்சு வடிவத்திலும், இணையதளத்திலிருந்து தரவிறக்கும் வகையிலும் வெளியாகியுள்ளது.

க்மதுரை வரைபடத்தை வெளியிட்ட இன்டாக் அமைப்பு
மதுரை வரைபடத்தை வெளியிட்ட இன்டாக் அமைப்பு

https://intachmadurai.org/heritage-map/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதனை கூகுள் வரைபடத்தோடு இணைத்துள்ள காரணத்தால், சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மதுரையில் பாரம்பரிய இடங்களுக்குச் செல்லும் வகையில் கூகுள் வரைபடமே சிறந்த முறையில் வழிகாட்டும். மேலும் அதில் படங்கள் மட்டுமன்றி, அந்த இடங்களைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

மதுரையின் ஆன்மா என்பது அதன் பாரம்பரியமான தலங்களில் தான் உள்ளது. பாறை ஓவியங்கள், கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், சமணப் படுகைகள், இந்து மதம் தோன்றியதற்குப் பின்னால் உருவான இடங்கள், ஆங்கிலேயர் காலத்து பாரம்பரியங்கள் என 20 கி.மீ. சுற்றளவுக்குள் மதுரையில் உள்ளன.

இந்த இடங்களின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் உலகமெல்லாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த வரைபட வெளியீட்டின் நோக்கம். குறிப்பாக மதுரையிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்பது முதன்மை நோக்கமாகும்.

இந்த வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை பாரம்பரிய இடங்களும் இந்த வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. அச்சு வடிவத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இச்சிறு வழிகாட்டியில் கிட்டத்தட்ட 37 இடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 100 இடங்களுக்கு மேல் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அவனியாபுரம் கண்மாய், கூத்தியார் குண்டு சிவன் கோயில், விக்கிரமங்கலம் சிவன் கோயில் உட்பட வைகை ஆற்றின் தெற்குப் பகுதியில் 20 இடங்களும் கோரிப்பாளையம் தர்ஹா, அரிட்டாபட்டி, பாண்டி முனி கோவில், சோழவந்தான் தென்கரை சிவத்தலம் வரை வடக்குப் பகுதியில் 17 இடங்களும் என 37 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைபடத் தயாரிப்பில் மதுரையிலுள்ள டிவிஎஸ் & சன்ஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. இன்டாக் உறுப்பினர்களான ராஜேஷ் கண்ணா, ரத்தினபாஸ்கர், ராம், மதன், பொன் மீரா மற்றும் சந்தான ஐயப்பா ஆகியோர் இணைந்து இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இன்டாக் இணையதளத்தில் இதனை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விருதுநகர் அருகே 600 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டெடுப்பு!

Last Updated : Mar 28, 2023, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.