மதுரை நடராஜ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கருமுகிலன் (37). இவர், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை சீர்குலைக்கும் விதமாக வாட்ஸ் அப்பில் கரோனா பெருந்தொற்று குறித்து தகவல் பரப்பியதாக கரிமேடு காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரது இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கரோனா வைரஸ் பற்றிய அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு அலுவலர்களால் பொதுமக்கள் உயிரைக்கூட காப்பாற்ற முடியாது என்று வதந்தியை பரப்பியுள்ளதாக காவல் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கருமுகிலன் மேல் காவல் துறை தொடுத்த வழக்கின் அடிப்படையில் கரிமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிய 1,122 பேர் மீது வழக்கு!