மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (31). இவர், வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இருபது லிட்டர் சாராயம் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: இரு கொள்ளையர்கள் கைது