மதுரை மாவட்டம், செல்லூர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் தெரு நாய் ஒன்றினை மனிதத் தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப் பகுதியிலேயே பலமுறை அடித்துக் கொடூரமாகத் தாக்கி உயிரை பறித்ததோடு, பிளாஸ்டிக் பையில் நாயைக் கட்டி தூக்கிச்செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிந்து விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் விமல்ராஜை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: நாயை அடித்தே கொன்ற கொடூரர்கள்!