ETV Bharat / state

மதுரையில் மதுக்கடைகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரம்! - Tamilnadu Wine Shop Opening Date May 7

மதுரை: மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு நாளையிலிருந்து அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மதுக்கடைகள் திறப்பு ஏற்பாடுகள்  மே 7 ஆம் தேதி மதுக்கடைகள் திறப்பு  தமிழ்நாடு மதுக்கடைகள் திறப்பு மே 7 ஆம் தேதி  Madurai Wine Shop Opening Arrangements  Tamilnadu Wine Shop Opening Date May 7  Wine Shop Opening Date May 7
Madurai Wine Shop Opening Arrangements
author img

By

Published : May 6, 2020, 1:02 PM IST

கரோனா நோய்த் தொற்றை கட்டுபடுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏறக்குறைய 40 நாள்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 7 ஆம் தேதியிலிருந்து மதுக்கடைகளை திறக்கபடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, மதுரையில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மதுரை மாநகரில் உள்ள 73 கடைகளிலும் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் சில திருமண மண்டபங்களில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மதுபானக் கடைகள் அனைத்தும் நாளை திறக்கப்படுவதையொட்டி திருமண மண்டபங்களில் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அனைத்தும் அந்தந்த மதுபானக் கடைகளுக்கு ஊழியர்களால் தற்போது அனுப்பப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் மட்டும் சற்றேறக்குறைய 260-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. அவை அனைத்தையும் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

இவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மட்டும் அடுத்த அறிவிப்பு வரும்வரை திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் ரூ.197 கோடி மது விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.