ETV Bharat / state

பேராசிரியர் நியமன முறைகேடு: போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸ்!

மதுரை: பேராசிரியர் நியமன முறைகேட்டைக் கண்டித்து வக்பு வாரிய கல்லூரி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

madurai
author img

By

Published : Jul 29, 2019, 4:00 PM IST

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பேராசிரியர்களை நியமனம் செய்ய கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி மூன்று கட்ட விசாரணை தற்போதுவரை முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பேராசிரியர் நியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, ஆளும்கட்சி தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வக்பு வாரிய கல்லூரியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்பு வாரிய கல்லூரி முன் சாலை மறியல் போராட்டம்
அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்கார்ர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் காவல் துறையினர் தாக்கியதாகக் கூறி சாலைமறியல் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, 'வக்பு வாரிய கல்லூரியில் அமைச்சர்களின் ஆதரவோடு பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வக்பு வாரிய கல்லூரியில் அனைத்தும் லஞ்சம் என ஆகிவிட்டது. சமுதாய கல்லூரியை ஊழலால் சீரழித்து மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கின்றனர். ஊழல் செய்த கல்லூரி செயலர் ஜமால் மைதீனை வெளியேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக கல்லூரிக்குள் சென்று வெளியேற்றும் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

Intro:பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு - வக்பு வாரியக் கல்லூரி முன்பாக போராட்டம்

பேராசியர் நியமன முறைகேட்டை கண்டித்து வக்புவாரிய கல்லூரி முன் சாலை மறியல் இன்று நடைபெற்றது. போலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.Body:பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு - வக்பு வாரியக் கல்லூரி முன்பாக போராட்டம்

பேராசியர் நியமன முறைகேட்டை கண்டித்து வக்புவாரிய கல்லூரி முன் சாலை மறியல் இன்று நடைபெற்றது. போலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை வக்புவாரிய கல்லூரியில் பேராசியர்களை நியமன செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் 3 கட்ட விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது,

இந்நிலையில் பேராசிரியர் நியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, ஆளும்கட்சி தலையீடு ஆகியவற்றை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் வக்பு வாரிய கல்லூரியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலிசாருக்கும் போராட்டக்கார்ர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலிசார் தாக்கியதாக கூறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்தனர்,

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, வக்புவாரிய கல்லூரியில் அமைச்சர்களின் ஆதரவோடு பேராசியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது, தகுதியற்ற பேராசிரியர்களை நியமிக்க கோடிக்கணக்கில் சுருட்டிய அதிமுக நிர்வாகி ஜமால்மைதீனை கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

வக்பு வாரிய கல்லூரியில் அனைத்தும் லஞ்சம் என ஆகிவிட்டது, சமுதாய கல்லூரியை ஊழலால் சீரழித்து கல்லூரியை சீரிழத்து மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கின்றனர் , ஊழல் செய்த கல்லூரி செயலர் ஜமால்மைதீனை வெளியேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக கல்லூரிக்குள் சென்று வெளியேற்றும் போராட்டம் நடத்துவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.