ETV Bharat / entertainment

மதகஜராஜா போல பல ஆண்டுகள் வெளியாகாமல் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா? - UNRELEASED TAMIL MOVIES

Unreleased Tamil Movies: மதகஜராஜா போல பல ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ள திரைப்படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்

ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்
ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள் (Credits: Film Posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 9, 2025, 3:45 PM IST

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி என பலரும் நடித்துள்ள திரைப்படம் ’மதகஜராஜா’. இப்படம் 2013ஆம் ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

’மதகஜராஜா’ படத்தைப் போலவே மொத்த படப்பிடிப்பும் முடிந்து டீசர், டிரெய்லர் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவித்தும் நிறைய தமிழ் படங்கள் ஆண்டுக்கணக்கில் ரிலீஸ் ஆகாமல் இருகின்றன. அவை என்னென்ன படங்கள், எவ்வளவு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.

ரெண்டாவது படம்

2010ஆம் ஆண்டு வெளிவந்த ’தமிழ்ப் படம்’ திரைப்படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் C.S.அமுதனின் இரண்டாவது திரைப்படம். படத்தின் பெயரும் ‘ரெண்டாவது படம்’ தான். விமல், அரவிந்த ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலெட்சுமி, ரிச்சர்ட் ரிஷி என பலரும் நடித்திருந்த்த இத்திரைப்படம் 2013ஆம் ஆண்டே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் இப்படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. 13 ஆண்டுகளாகி விட்ட பின்பும் இப்படத்தினை ரசிகர்கள் மறக்கவில்லை. C.S.அமுதன் தமிழ்படம் 2, ரத்தம் என அடுத்து இரண்டு படங்களை இயக்கி விட்டார்.

ரெண்டாவது படம்
ரெண்டாவது படம் (Credits: Film Posters)

இடம் பொருள் ஏவல்

2014 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றளவு இந்த படத்தின் பாடல்கள் பலருக்கு பிடித்தமான பாடல்களாக உள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு படம் விரைவில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடிகள் தான் இத்திரைப்படம் வெளியாகாததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல் (Credits: Film Posters)

சர்வர் சுந்திரம்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய காலத்தில் உருவான திரைப்படம் ’சர்வர் சுந்திரம். கிரண், வைபவி, சினேகன், ராதாரவி ஆகியோர் நடிப்பில் ஆனந்த் பால்கி இப்படத்தை இயக்கியிருந்தார். சமையற்கலையை மையமாக கொண்ட இத்திரைப்படத்தில் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் போன்றோரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களும், டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இப்போது வரை படம் ரிலீஸாகமல் இருக்கிறது.

சர்வர் சுந்திரம்
சர்வர் சுந்திரம் (Credits: Film Posters)

பாரிஸ் பாரிஸ்

2014ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான க்யூன்(Queen) படத்தின் ரீமேக் பாரிஸ் பாரிஸ். காஜல் அகர்வால் நடித்து ரமேஷ் அரவிந்த் இயக்கிய இத்திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 2018ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. ஆனால் இப்போது வரை படம் குறித்தான எந்த அறிவிப்பும் இல்லை. 2020ஆம் ஆண்டே அமித் திரிவேதி இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. தற்போது தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.

பாரிஸ் பாரிஸ்
பாரிஸ் பாரிஸ் (Credits: Film Posters)

பார்ட்டி

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யாகிருஷ்ணன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ’பார்ட்டி’. பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகர் சூர்யா, கார்த்தி இருவரும் இத்திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளனர். 2018ஆம் ஆண்டே வெளிவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 வருடங்களாகியும் இன்னும் வெளிவரவில்லை.

பார்ட்டி
பார்ட்டி (Credits: Film Posters)

ஆலம்பனா

வைபவ், முனிஷ்காந்த், ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகியோர் நடிக்க பாரி கே விஜய் இயக்கிய படம் ஆலம்பனா. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இதில் முனிஷ்காந்த் பூதமாக நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்து படம் தயாராகிவிட்ட நிலையில் இன்னும் ஆலம்பனா ரிலீஸாகவில்லை. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தும் ரிலீஸாகவில்லை.

ஆலம்பனா
ஆலம்பனா (Credits: Film Posters)

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், விநாயகன், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'. 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இப்படம் பல்வேறு பிரச்னைகளால் வெளியாகமல் இருக்கிறது. பாடல்கள், டிரெய்லர் வெளியான நிலையில் கடந்த வருடம் இப்படம் வெளியாகும் என்று தேதி குறிப்பிடப்பட்டு, அறிவிப்பும் வந்தது. ஆனால் தற்போது வரை வெளியாகவில்லை.

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம் (Credits: Film Posters)

இதையும் படிங்க: ரஜினிகாந்த் பயோபிக் எடுக்க ஆசை, இந்தியன் 2 விமர்சனம் - மனம் திறந்த இயக்குநர் ஷங்கர்!

இவை மட்டுமில்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடித்த ’நரகாசூரன்’, அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் எச்.வினோத் கதை, வசனம் எழுதிய ’சதுரங்க வேட்டை 2’, பிரபுதேவா, இலட்சுமி மேனன் நடிப்பில் உருவான ’யங் மங் சங்’, விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடித்த 'அக்னிச் சிறகுகள்', மிர்ச்சி சிவா நடித்த சுமோ, கலையரசன், காளி வெங்கட், ஆனந்தி நடித்த ’டைட்டானிக்: காதலும் கடந்து போகும்’, அரவிந்த் சாமியின் ’கள்ளபார்ட்’ என பல படங்கள் வெளியாகமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.