மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து பிரிவு உதவி ஆணையாளர் திருமலைக்குமார் உத்தரவின்பேரில் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உள்ள சாலைகள் இன்று (நவ. 27) முதல் சோதனை முயற்சியாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெப்பக்குளம் - அனுப்பானடி பிரிவு வழியாக திரும்பி தெப்பக்குளத்தை சுற்றி மாட்டுத்தாவணி, விரகனூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
விரகனூர் சுற்று சாலையிலிருந்து வரும் வாகனங்கள் நேராக மாரியம்மன் கோயில் வழியாக நகர் பகுதிக்கு வர வேண்டும். இந்த மாற்றங்கள் மூலமாக தெப்பக்குளம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்படும்.