மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் நேற்று (ஆகஸ்ட் 15) புதிதாக 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 105 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்தனர்.
அதே சமயம் மதுரையில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்து 643 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 300 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். தற்போது 1,028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 303 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பிளாஸ்மா தானம் மூலமாக ஏழு பேர் இதுவரை குணமாகி உள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர், கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரம் மலர் சந்தை செயல்படும்!