ETV Bharat / state

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவுபடுத்தவேண்டும் - வெங்கடேசன் எம்பி - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மதுரை: நத்தை வேகத்தில் நடைபெற்று வரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

Madurai Smart City projects need to be expedited said mp su.venkatesan

author img

By

Published : Sep 18, 2020, 3:51 PM IST

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் பேசிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மதுரை ஸ்மாட்ர் சிட்டி திட்டப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் (தனி) ஹர் தீப் சிங் பூரி, "2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டாவது சுற்றில் மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டது. 977.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் ரூ. 12 கோடி செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளது.

பாரம்பரிய வழிகள், தெருக்களின் வடிவம், பெரியார் பேருந்து நிலைய மறு மேம்பாடு, சுற்றுலா வசதிகள், வைகை ஆறு மேம்பாடு, மாநில அளவிலான தகவல் தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மையம், மண்டலம் 1,2,3, 4 ஆகியவற்றின் தெரு விளக்கு நவீன மயம், பல் தட்டு கார் நிறுத்தம், தண்ணீர் அளிப்பு பகிர்வு, முல்லைப் பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் அளிப்பு மேம்பாடு, தமுக்கம் மைதானத்தில் கலையரங்கம், புதிய விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை ஆகிய ரூ. 965.55 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் தொடங்குவதற்கான வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவை ஐந்து ஆண்டுகளில் முடிவடையுமென எதிர்பார்க்கிறோம். பழச் சந்தையில் கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் என்கிற ரூ. 12 கோடி திட்டம் நடந்து முடிந்துள்ளது" என்றார்.

பின்னர் பேசிய எம்.பி., வெங்கடேசன், "கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நகர்ந்துள்ள வேகம் போதுமானதல்ல. ஒரே ஒரு திட்டம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும்.

இது குறித்து அனைத்து மட்டங்களிலிருந்தும் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அமைச்சக மட்டங்களிலும் தொடர்ந்து மாமதுரை வளர்ச்சிப் பணி தொய்வின்றி நடந்தேற தொடர்ந்து முனைப்போடு குரல் கொடுப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது' - அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.