மதுரை: திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரனுக்கும் நேற்று (செப்.9) திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி, முன்னரே திருமணமாகி கணவரைப் பிரிந்து மணவிலக்குப் பெற்று வாழ்ந்து வருகிறார். இவருக்கு எட்டு வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் ஓவியர் ஆதிஸ் - சுபாஷினி ராஜேந்திரன் திருமணம் நேற்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேராசிரியை சுபாஷினியின் மகன் தர்ஷன் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் ஆதிஸ், சுபாஷினியின் கழுத்தில் கட்டினார்.


பிறகு பெரியார் படத்தின் முன்பாக இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இத்திருமணம் உறவினர்கள். நண்பர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இத் திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 3.99 லட்சம் பேர் பயன்