மதுரை மாநகர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ள 54 இடங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மூன்று ட்ரோன் கேமராக்கள் மூலமாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரம் முழுவதும் காவல் துறையினர் நூதனமான முறையில் கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எளிதில் கிடைக்கவும், மக்கள் அவற்றை தவறாது கடைபிடிக்கவும் பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணித்து அவர்களை பாதுகாக்கவும், மாநகர புதிய காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் கவனக் குறைவாகவும் அலட்சியமாகவும் விழிப்புணர்வு இல்லாமலும் சாலை மற்றும் வீதிகளில் நடமாடி வருவதை முற்றிலும் தவிர்க்கவும் இந்த ஒலிபெருக்கி வாயிலாக வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஊரடங்கு நிபந்தனைகளை அனைவரும் கடைபிடிக்க வலியுறுத்தியும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க...தோல்வி அடைந்த நாடுகள் செய்த தவறை இந்தியா செய்துவிடக் கூடாது - மூத்த பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு