ETV Bharat / state

வண்ணம் கொண்ட வெண்ணிலவே மண்ணை விட்டு மறைந்தாயோ - உருகும் மேடை இசை கலைஞர்கள் - spb death

மதுரை: எஸ்.பி.பி. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையவில்லை என மதுரை இசை மேடை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

spb death
spb death
author img

By

Published : Sep 25, 2020, 10:25 PM IST

எஸ்.பி.பி.யின் மறைவு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி மதுரை மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

இதில் பங்கேற்ற மேடை பாடகர்கள் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும்வகையில் அவரது சோக பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினர்.

அதில், "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்', 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ', 'என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்', 'நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தயே நீயே', 'உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா', 'இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்', 'மலரே மௌனமா மௌனமே வேதமா', 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ' உள்ளிட்ட 8 பாடல்களை பாடினர். வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்கிற பாடலை அனைத்து பாடகர்களும் கண்ணீர் மல்க ஒருங்கிணைந்து பாடினார்கள்,

எஸ்பிபிக்காக உருகும் இசை மேடை கலைஞர்கள்

மேடை பாடகர் அய்யனார் கூறுகையில் "உலக மக்களை இசையின் மூலம் குணமாக்கியவர் எஸ்.பி.பி., இசை ஜாம்பவானாகத் திகழ்ந்த எஸ்.பி.பி. மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையவில்லை" என்றார்.

இதையும் படிங்க: இனி இறைவன் சபையில் கலைஞன் நீ...! - நடிகர் மயில்சாமி இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.