ETV Bharat / state

பெரும் நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்குகிறது பாஜக அரசு - சு. வெங்கடேசன் தாக்கு - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்கமோ பெருந்தொழில் நிறுவனங்களுக்கு பல்லக்கு சுமக்கிறது என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.

madurai mp su.venkatesan hits center on his parliamentary speech

author img

By

Published : Feb 10, 2021, 2:44 PM IST

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய எம்.பி., சு. வெங்கடேசன், "குடியரசுத் தலைவர் இந்த அரசாங்கத்தை வெகுவாகப் புகழ்ந்து ஒரு உரை நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக கரோனா காலத்தில் மிகவும் துரிதமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு நாட்டின் பல லட்சக்கணக்கானவர்களை இந்த அரசு காப்பாற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தி லோலி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் உலக அளவில் நாடுகள் கரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்த தரவுகளின் அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இடம் 86 என்பதை குடியரசுத் தலைவர் அறிவாரா என்று தெரியவில்லை.

அதேபோல கரோனா காலகட்டத்தில் பல திட்டங்களை வகுத்து பல லட்சக்கணக்கான மக்களை இந்த அரசு காப்பாற்றியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நான் இந்த நேரத்தில் 13 வயதான ஜம்லோவை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தெலங்கானாவில் இருந்து சத்தீஸ்கர் நோக்கி சென்று கொண்டிருந்த 13 வயது ஜம்லோ மூன்று நாட்களில் 140 கிலோ மீட்டர் நடந்து தன்னுடைய ஊரை அடைய முற்பட்டார். ஆனால் அவர் ஊரை அடைவதற்கு 60 கிலோ மீட்டருக்கு முன்னதாக மயங்கி விழுந்து இறந்து போனார். வெறும் சோர்வும் உணவின்மையும் மட்டுமல்ல அவருடைய மரணத்திற்கான காரணம், இந்த அரசு கடைபிடித்த கொள்கையே மிக முக்கியமான காரணம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் காலத்தில் நாடு எண்ணற்ற ஜம்லோக்களை இழந்துள்ளது.

அதேபோல உழவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வேளாண் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், போராட்டம் செய்பவர்களை போராடி பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப்படுத்துகிறார். இது மிகவும் வேதனையாக இருக்கின்றது. வேளாண் மக்கள் ஏர் கலப்பைகளை தங்கள் தோள்களில் சுமப்பார்கள், இந்த அரசாங்கத்தை போல கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமப்பவர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

பாலகோட் தாக்குதல், டிஆர்பி ரேட்டிங் பயன்படுத்தியது குறித்து ஒரு வார்த்தை கண்டித்துப் பேசவில்லை அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை, ஒரு பக்கம் விவசாயிகள் வாழ்க அல்லது இந்த நாட்டினுடைய ராணுவ வீரர்கள் வாழ்க என்று முழக்கமிடுகிற இவர்கள் இங்கே நடந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்களையும் கொச்சைப் படுத்துகிற பல செயல்களை கண்டிக்க முன்வரவில்லை. உண்மையில் குடியரசுத் தலைவரின் உரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

அதேபோல பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து கடந்த நவம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் உள்துறை அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக பதில் அளித்திருக்கிறார். ஆனால் சமீபத்திலே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு தான் இந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறது. மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்கிறார்.

இப்படியாக மூன்று பேரும் கால்பந்தாட்டத்தை போல எழுவரின் விடுதலையை கையாளுகிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழக அரசின் சிறை விதிகள் ஆயுள் தண்டனை 20 ஆண்டுகள் மட்டுமே என்று சொல்கிறது. அதைக் கடந்து 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்திருக்கிற ஏழு பேருக்கும் நீதி வேண்டும்" எனப் பேசினார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.