ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் - சு வெங்கடேசன் எம்பி - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம்

கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டியுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா
author img

By

Published : Oct 16, 2021, 3:25 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏதாவது ஒரு மீறல் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேந்திரிய வித்யாலயா.
ஒரு பணி நியமன அறிவிக்கை சென்னை ஐ.ஐ.டி & சி.எல்.ஆர்.ஐ கேந்திரிய வித்யாலயாவால் 13/10/2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், யோகா ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது; அதற்கான "வாக் இன் இன்டர்வியூ" 20.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம்

இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை 14.10.2021 அன்று அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுப்பியுள்ள கேள்விகள்.

இது நிரந்தர காலியிடங்களை நிரப்ப கொல்லைப் புற வழியா? மொத்த பணியிடங்கள் எவ்வளவு? காலியாக இருப்பவை எவ்வளவு? அவற்றை நிரப்ப நிரந்தர பணி நியமனங்களுக்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது? ஏன் ஓராண்டு முன்பாகவே அடுத்த ஆண்டுக்கான தேவையை கணக்கில் கொண்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது?

கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் - சு வெங்கடேசன் எம்பி

இட ஒதுக்கீடு

இந்த அறிவிப்பில் ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்து எதுவுமே ஏன் ஒரு வரி கூட சொல்லப்படவில்லை? தற்காலிக நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். என்றெல்லாம் உள்ள அரசின் உத்தரவுகள் அமலாக வேண்டாமா? இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பணி நியமன அறிவிக்கையில் வெளிப்படையாக தரப்பட வேண்டாமா?

நடவடிக்கையை எதிர்பார்ப்போம்

இது போன்ற மீறல்கள் அனுமதிக்கப்படக் கூடாது. உடனே ஒன்றிய அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரி இருந்தேன். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் பரிசீலனைக்கு எனது கடிதம் முன் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்போம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நான் முழு நேரத் தலைவர்; ஊடகத்திடம் பேசுவதை நிறுத்துங்கள்; மறுமலர்ச்சிக்கு ஒற்றுமை தேவை- சோனியா காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.