ETV Bharat / state

எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

மதுரை: எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு என்றென்றும் கலந்திருக்கும் என எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் நாகராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.

mgr nagaraj
mgr nagaraj
author img

By

Published : Dec 24, 2019, 3:14 PM IST

மதுரை அனுப்பானடியில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு அதிமுக தொண்டர்களால் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 32ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஈடிவி பாரத் செய்தியாளர்கள் எம்ஜிஆர் கோயிலின் பூசாரி நாகராஜை சந்தித்தோம்.

இந்த கோயில் குறித்து அவர் கூறுகையில், ‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 1988ஆம் ஆண்டு இக்கோயில் உருவாக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழையும் நினைவையும் போற்றும் வகையில் இந்தக் கோயிலை சிறப்பாக நடத்தி வருகிறோம்.

MGR Nagaraj speaks with ETV Bharat

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாட்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் 36 பேர் முடி காணிக்கை செய்தனர்.

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம். மாலை வேளைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களை இங்கே திரையிடுகிறோம்.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுத் திகழ்கிறது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆன பின்னரும்கூட எம்ஜிஆர் என்ற பெயரால் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்' என்று பெருமையுடன் கூறினார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் நினைவு நாளன்று உறுதிமொழி: தொண்டர்களை அழைக்கும் அதிமுக!

Intro:மூன்றெழுத்தில் அவர் மூச்சிருக்கும்' - எம்ஜிஆர் கோவில் பூசாரி நாகராஜ் பெருமிதம்

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து தமிழக மக்களின் உணர்வோடு கலந்தது. என்றென்றும் அந்த சொல்லின் வாயிலாக எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்ற மதுரையிலுள்ள எம்ஜிஆர் அம்மா திருக்கோவில் பூசாரி நாகராஜ் பெருமிதம்.Body:மூன்றெழுத்தில் அவர் மூச்சிருக்கும்' - எம்ஜிஆர் கோவில் பூசாரி நாகராஜ் பெருமிதம்

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து தமிழக மக்களின் உணர்வோடு கலந்தது. என்றென்றும் அந்த சொல்லின் வாயிலாக எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்ற மதுரையிலுள்ள எம்ஜிஆர் அம்மா திருக்கோவில் பூசாரி நாகராஜ் பெருமிதம்.

மதுரை அனுப்பானடியில் எம்ஜிஆர் அம்மா திருக்கோவில், எம்ஜிஆரின் தீவிரத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32-ஆவது நினைவுநாள் டிசம்பர் 24-ஆம் நாள் அனுசரிக்கப்படும் நிலையில், ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக எம்ஜிஆர் கோவிலின் பூசாரி எம்ஜிஆர் நாகராஜை சந்தித்தோம்.

அவர் மேலும் கூறியதாவது, 'எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 1988-ஆம் ஆண்டு இக்கோவில் உருவாக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளாக தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவையும் புகழையும் போற்றும் வகையில் எம்ஜிஆர் திருக்கோவில் பக்தர்கள் சார்பாக இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளிலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளிலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் 36 பேர் முடி காணிக்கை செய்தனர்.

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம். மாலை வேளைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களை இங்கே திரையிடுகிறோம்.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து என்பது மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் திகழ்கிறது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆன பின்னரும்கூட எம்ஜிஆர் என்ற பெயரால் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்' என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.