ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

author img

By

Published : Nov 28, 2019, 3:14 PM IST

madurai meenatchi temple
madurai meenatchi temple

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக நான்கு கோபுரங்களிலும் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு காவல் துறை அலுவலகத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் பண்பலை அலுவலகம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் முகவரி மூலமாக வந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களையும் தீவிரச் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக் திருக்கோவில் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் மாசி வீதிகளிலும் பெரியார் பேருந்து நிலையம் வரை காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காமராஜரை அவமதித்தவர் கருணாநிதி- சீமான் குற்றச்சாட்டு !

Intro:*மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலத்த போலீஸ் பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை*Body:*மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலத்த போலீஸ் பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை*

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு கோபுரங்களிலும் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிலையில் நேற்று இரவு காவல்துறை அலுவலகத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடைக்கானல் பண்பலை அலுவலகம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் முகவரி மூலமாக வந்ததாக தகவல் வந்ததையடுத்து தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களையும் முழுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக் திருக்கோவில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்,தொடர்ந்து அந்த பகுதி முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் மாசி வீதிகளிலும் பெரியார் பேருந்து நிலையம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.