ETV Bharat / state

முழுவதும் பதியம் எடுத்து நூலாக மாறும் மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுக்கள் - Meenakshi Amman Temple

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுக்கள் அனைத்தும் வரலாற்றிலேயே முதன்முறையாக வாசிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு விரைவில் நூலாக வெளிவர உள்ளது.

மீனாட்சி கோயில்
மீனாட்சி கோயில்
author img

By

Published : Sep 17, 2020, 10:13 AM IST

Updated : Sep 18, 2020, 9:25 AM IST

மதுரையின் மகத்தான அடையாளமாக இன்றளவும் திகழ்வது மீனாட்சி அம்மன் திருக்கோயில். பல்வேறு சிறப்புகளையும், வரலாறுகளையும் கொண்டுள்ள இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் முழுவதும் வாசிக்கப்படாமலும், தொகுக்கப்படாமலும் இருந்த நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு இந்தப் பணியைத் தொடங்கி தற்போது வெற்றிகரமாக தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

வாசிக்கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுக்கள், அவற்றிலுள்ள தகவல்கள் அனைத்தையும் தொகுத்து கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோரிடம் நூலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் விரைவில் இந்நூல் வெளியிடப்படவுள்ள நிலையில், முனைவர் சாந்தலிங்கம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, கல்வெட்டுக்களில் உள்ள பல்வேறு வியக்கத்தக்க தகவல்களை சிறப்பு நேர்காணலாக வழங்கினார்.

இதுகுறித்து பேசிய சாந்தலிங்கம், 'மதுரை கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதை மதுரைக் காஞ்சி, பரிபாடல் திரட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் பாடல்களாகப் பதிவு செய்துள்ளன. ஆனால், இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் முழுமையாக வாசிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும்விதமாக கடந்த ஓராண்டிற்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக இந்திய தொல்லியல் துறை நான்கு கல்வெட்டுக்களை மட்டுமே முழுமையாக வாசித்து அதனை வெளியீடு செய்துள்ளது. மேலும் 60 கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு ஆங்கிலக் குறிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், கோயிலில் உள்ள ஏறக்குறைய 410 கல்வெட்டுக்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதுதான் எங்களால் முழுமையாக பதியம் எடுக்கப்பட்டு, வாசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 கல்வெட்டுக்கள்தான் முழுமையானவையாகும். இவைகள் அரசர்களின் பெயர்களை தாங்கிய கல்வெட்டுக்களாக உள்ளன. கோயிலுக்குத் தொடர்பில்லாத கல்வெட்டு ஒன்றுதான், அது முதல் கல்வெட்டாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. அதனை 'வைகைக் கரை கல்வெட்டு' என்பார்கள்.
வாசிக்கப்படும் கல்வெட்டுக்கள்
பதியம் செய்யப்படும் கல்வெட்டுக்கள்
1961-இல் பேராசிரியர் கே.வி. ராமனால் குருவிக்காரன் சாலை பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அது கி.பி.700ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். அதற்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள் என்று சொல்லக்கூடிய கி.பி.1190-1311ஆம் ஆண்டுகள் வரை ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. அவர்களின் முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் என்பவனின் கல்வெட்டுதான் பழமை வாய்ந்தது.
அழியும் தன்மை வாய்ந்த மண், செங்கல், மரம், சுதை போன்ற பொருட்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கி.பி.13-ஆம் நூற்றாண்டில்தான் தற்போதுள்ள கட்டுமானத்தில் சிவன் கோயிலும் அதே சமகாலத்தில் அம்மனுக்கும் கோயில் கட்டப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலும் கல்வெட்டுக்களும்
இங்குள்ள கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை கோயில் செலவுகள், நிலக்கொடைகள் பற்றிக் குறிப்பிடுவனவாக உள்ளன. விஜயரங்க சொக்கநாதன் காலத்தில், பல்லக்குத் தூக்கிகள் 64 பேர் தங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை அரசு பறித்துக் கொண்டது குறித்து முறையிட மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் கூடி முழக்கமெழுப்பியுள்ளனர். அதற்கு அரசர் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை என்றவுடன், கோபுரத்தின் மேலிருந்து ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். அந்தக் கல்வெட்டும் கிழக்குக் கோபுரத்தில் உள்ளது.அதேபோன்று கோயிலில் நடைபெற்று வந்த சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஐப்பசி, வசந்தன் திருவிழா ஆகியவை குறித்தும் கல்வெட்டுக்கள் உள்ளன. தெப்பத் திருவிழா நடைபெற்றது குறித்தும் ஒரு கல்வெட்டு உள்ளது. தற்போது போன்று அல்லாமல் இங்குள்ள சிவன் திருவாலவாயுடைய நாயனார் என்ற பெயராலும், அம்மன் 'அங்கயற்கண்ணி' என்ற பெயராலும் குறிப்பாக 'திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்' என்ற பெயராலும்தான் அழைக்கப்பட்டுள்ளனர்.
பதியம் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள்
பதியம் எடுக்கப்படும் கல்வெட்டுக்கள்
1752-இல் தான் முதன்முதலாக மீனாட்சி என்ற சொல் வழக்கு வருகிறது. அதேபோன்று சுந்தரேஸ்வரர் என்ற பெயரும் 1898-இல் தான் புழக்கத்திற்கு வருகிறது' என்கிறார்.
மேலும் தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் தலைமையில், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட குழுவினரின் ஓராண்டு உழைப்பு இந்த அரிய நூலைப் படைக்க உதவி புரிந்திருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருந்த கல்வெட்டுக்கள் தற்போது முழுவதுமாக வாசிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதன் முழுமையான வரலாறு பொதுமக்களிடம் சென்று சேர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Sep 18, 2020, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.