மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள உப கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், 87 லட்சத்து 50 ஆயிரத்து 951 ரூபாய் ரொக்கம், 461 கிராம் தங்கம், 1 கிலோ 920 கிராம் வெள்ளி மற்றும் அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 579 இருந்தன. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையரும் மற்றும் செயல் அலுவலருமான நடராஜன் முன்னிலையில் உண்டியல் தொகை எண்ணும் பணி நடைபெற்றது.
உதவி ஆணையர் மு.விஜயன், உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் என சுமார் 315 பேர் உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.