ETV Bharat / state

பக்தர்களின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பக்தர்களின்றி நடைபெற்றது.

madurai-meenakshi-amman-temple-festivel
madurai-meenakshi-amman-temple-festivel
author img

By

Published : Apr 24, 2021, 3:25 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22ஆம் தேதி பட்டாபிஷேகம், 23ஆம் தேதி திக்விஜயம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் 10ஆம் நாளான இன்று (ஏப்.24) விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. கரோனோ பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.

வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின்றி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஆண்டும் கரோனோ பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன்
மதுரை மீனாட்சியம்மன்
நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்துகொண்டு இத்திருக்கல்யாணத்தை நடத்தினர். இருப்பினும் கோயில் இணையதளம், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தின் மூலம் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்து பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே காண ஏற்பாடுசெய்யப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் எழுந்தருளினர். திருக்கல்யாண மேடையானது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோயிலுக்கு வெளிப்புறம் புது மண்டபம் முன்பாக நூற்றுக்கணக்கான பெண்கள் புதிய தாலி கயிற்றில் திருமங்கல்யத்தை மாற்றிக்கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளுவது வழக்கமாக இருந்துவரும் நிலையில் பக்தர்களின்றி எளிமையான முறையில் நடைபெறுவதால் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் பங்கேற்கவில்லை.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
திருக்கல்யாணம் முடிந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளும் அம்மனைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கல்யாணத்தையொட்டி இன்று காலை 6 மணிமுதல் 9.30 மணி வரை வழக்கமான தரிசனத்திற்குப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோயிலுக்கு அருகிலேயே பக்தர்கள் தங்களது திருமாங்கல்ய கயிறு மீனாட்சி அம்மனை நினைத்து மாற்றிக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.