உலகப்பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்ம வாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனத்தில் என எழுந்தருளி ஆடி வீதிகளில் பவனி வந்தனர்.
இந்நிலையில் 11ஆம் நாளான நேற்று (ஏப். 25) மாலை சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுராபுரி அம்பிகை மாலை
இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன்
பிணங்கேன் - அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த
அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே!
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு