ETV Bharat / state

மதுரையில் உள்ள தனியார் மாலில் தீ விபத்து - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!

Madurai Mall fire accident: மதுரையில் உள்ள தனியார் மாலில் ஏற்பட்ட தீ விபத்தால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தனியார் மாலில் தீ விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 7:44 AM IST

மதுரையில் உள்ள தனியார் மாலில் தீ விபத்து

மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியார் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இந்த மாலில் நேற்று (டிச.23) இரவு சுமார் 9.30 மணி அளவில். வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் வளாகம் முழுவதும் தீ பரவி உள்ளது.

எனவே, உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாலில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தீயணைப்புத் துறையின் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தின்போது உயிர் சேதம் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த பகுதி முழுவதும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறை துணை ஆணையர், ஆர்டிஓ, வடக்கு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த தனியார் மால் அருகில் பெட்ரோல் பங்க், பள்ளிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை அருகே கிணற்றில் விழுந்த யானை: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.