ETV Bharat / state

’தமிழ்நாடு சோதனைக் களம் அல்ல... சமூக நீதியின் பலி பீடமும் அல்ல’ - சு.வெங்கடேசன் எம்பி - மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசனின் அறிக்கை

தமிழ்நாடு சோதனைக் களம் அல்ல, சமூக நீதியின் பலி பீடமும் அல்ல என மதுரை மக்களவை உறுப்பினர் ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரை செய்திகள்  மதுரை மக்களவை உறுப்பினர்  மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்  Madurai Lok Sabha member Venkatesh statement on insurance companies save up  Madurai Lok Sabha member Venkatesh statement  Madurai Lok Sabha member Venkatesh  madurai news  madurai latest news  மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசனின் அறிக்கை  அறிக்கை
மதுரை மக்களவை உறுப்பினர்
author img

By

Published : Jul 18, 2021, 2:09 PM IST

Updated : Jul 18, 2021, 3:32 PM IST

மதுரை: மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட்டில், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார்மயமாக்க முன்மொழியப்பட்ட நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஒரு அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இப்போதும் எந்த நிறுவனத்தை என்று கூற மாட்டேன் என்கின்றனர். ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே, இது என்ன ஜனநாயகம்?

நிறுவனத்தின் பெயர் கேட்டால் கூறமாட்டேன் என்று நிதியமைச்சர் கூறியபோதே, ’நிதி அயோக்’ தனது பரிந்துரையை அரசிடம் தந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துவிட்டன. இது கசிந்ததா அல்லது கசிய விடப்பட்டதா?

1971ஆம் ஆண்டில் 107 தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டுதான், நான்கு அரசு பொது காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பிறகு இந்த அரசு நிறுவனங்கள் பொது காப்பீட்டு பரவலை சிற்றூர்கள், கிராமங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளன.

த‌னியா‌ர் நிறுவனங்களின் அலுவலக அமைவிடங்கள் எல்லாம் அவர்கள் வணிகத்தில் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும், மெட்ரோ நகரங்கள் அல்லது இரண்டாம் தட்டு நிறுவனங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன என்ற காப்பீட்டு வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority) 2020 ஆண்டறிக்கை கூட சொல்வது நிதி அமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.

12 ரூபாய் பிரீமியத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு வழங்குகிற, வங்கிக் கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'பிரதான் மந்திரி சுரக்ச பீம யோஜனா' திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது காப்பீடு நிறுவனங்கள்தானே. லாபமா, மக்கள் நலனா என்றால் தனியார்கள் எதைத் தேர்வு செய்வார்கள்? அரசு நிறுவனங்கள் எதைத் தேர்வு செய்யும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

நான்கு அரசு நிறுவனங்கள் தனியார்வசம் போகக் கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல்ஐசி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதை பரிசீலிக்க வேண்டும்.

ஒன்றிய அரசே அரசின் நிதித் தேவைகளை ஈடு செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றை செய்ய அரசியல் உறுதி இல்லாமல் அரசு நிறுவனங்கள் மீது கை வைக்காதே!

இவ்வளவு காலம் பங்கு விற்பனைதான் அரசு நிறுவனங்களாகவே தொடரும் என்று பேசி வந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கம் இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அரசின் கைகளில் 51 விழுக்காடு பங்குகள் இருக்கும் வரை ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடி இட ஒதுக்கீடுகள் தொடரும். ஆனால் தனியார் மயம் என்றால் சமூக நீதியும் சேர்ந்து பாதிக்கப்படும். இட ஒதுக்கீடு இருக்காது.

யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனமே முதல் இலக்காக இருக்கும் என்று செய்திகள் வருவதும், அரசோ நிதி அயோக்கோ மவுனமாக அந்த செய்தி பரவ அனுமதிப்பதும் அதிர்ச்சி தருகிறது. யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் தமிழ்நாட்டில், சென்னையில், தலைமையகம் கொண்ட நிறுவனம். அதனால் அது அகில இந்திய நிறுவனம் எ‌ன்றாலு‌ம் அதன் சேவை இயல்பாகவே தமிழ் நாட்டையும், தென் மாநிலங்களையும் சுற்றி அதிகமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டத்தை இதுவே நிர்வகித்து வருகிறது.

நான்கு அரசு பொது நிறுவனங்களும் அரசின் கைகளிலேயே தொடரட்‌டும்! தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று (ஜூலை.18) நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன்.

மக்கள் நலனையும், தமிழ்நாட்டை த‌லைமை இடமாகக் கொண்டு இயங்குகிற ஒரு அரசு நிறுவனத்தையும், சமூக நீதியையும் காவு கேட்கிற இந்த தனியார்மய நகர்வை தமிழ்நாடு எதிர்க்கும். மும்பை, டெல்லி, கொல்கத்தாவை தலைமை இடங்களாகக் கொண்ட அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் காத்து நிற்கும். தேசத்தி‌ன் குரலை ஒன்று திரட்டுவதிலும் முன் நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - நாளை வெளியீடு

Last Updated : Jul 18, 2021, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.