மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் 2019 பாஜக அரசால் முன்வைக்கப்பட்ட சட்டத்தினை பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் 2015 டிசம்பருக்குள் குடியேறி இருந்தால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குப் பொருந்தாது என்றும், இலங்கையிலிருந்து வந்த ஈழத் தமிழர்கள், அங்கிருந்து வந்த இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது எனவும் இந்த குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டாம். நாட்டை மத ரீதியாக, இன ரீதியாக பாரதிய ஜனதா கட்சி பிளக்க நினைக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம்!