மதுரை - மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர், உதயம். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர், தனது வீட்டின் சுவரை இடித்துவிட்டு கட்டுமானப் பணி செய்யும் பொழுது பக்கத்து வீடான உதயம் என்பவரின் வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளார்.
இந்நிலையில், புதியதாக சுவர் கட்டித் தருவதாகக்கூறி நீண்ட நாள்களாக ஜெயராஜ் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று(அக்.07) உதயம், ஜெயராஜிடம் கேட்டதற்கு ஜெயராஜும், அவருடைய மனைவியும் உதயத்தை சாதி ரீதியாக அவதூறாகப் பேசி கட்டித் தர மறுத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து உதயம் மதுரை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதிச்சியம் காவல் துறையினர், வழக்கறிஞர், அவருடைய மனைவி உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
தஞ்சாவூரில் 1500 ஆண்டுக்கு முந்தைய சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு!