மதுரையில் கரோனா தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதன் காரணமாக இன்று (செப்.23) மட்டும் 79 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதுமில்லை.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 16 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 959 பேர் பூரண குணமடைந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர். 380 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.