ETV Bharat / state

'அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்! - மீனாட்சியம்மன் கோயில்

கடந்த நானூறு ஆண்டுகளாய் மதுரை மாநகரைக் கலக்கி வரும் கள்ளழகரின் வைகையாற்று எழுந்தருளல் என்பது வெறுமனே ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல. சாதி, சமய, மொழிகளின் நல்லிணக்க நாயகராகவும் கள்ளழகர் திகழ்கிறார் என்பதுதான் இதுவரை யாரும் அறியாத ஒன்று. அவரது மற்றொரு வரலாற்றுப் பக்கத்தை அலசுகிறது இந்த சிறப்புத் தொகுப்பு...

அலங்காரப் பிரியர் அழகர்
அலங்காரப் பிரியர் அழகர்
author img

By

Published : Apr 13, 2022, 11:11 PM IST

மதுரை: சித்திரை பிறந்துவிட்டாலே மதுரை மண், தனது வழக்கமான நாள்களைவிட மிக உற்சாகமான வகையில் விழாக்கோலம் பூண்டுவிடும். காரணம், மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றுடன் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் என லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற பெருவிழாவாகும். தன்னை அவமதிப்புச் செய்த சுதபஸ் முனிவரை மண்டூகமாய் சபித்துவிட, அந்த சாபத்தைப் போக்குவதற்காக மதுரைக்கு வருகின்ற அழகர் பெருமான், சமய, மத, மொழி, இன நல்லிணக்கத்துக்குச் சொந்தக்காரர் என்றால் அது மிகையல்ல. இதே சித்திரை மாதத்தில்தான் அந்த நிகழ்வும் மதுரை வண்டியூரில் நடந்தேறுகிறது.

திருமலை நாயக்கர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அவர் செய்த சில முக்கிய பண்பாட்டு மாற்றங்களுள் ஒன்றுதான், கள்ளழகரை வைபவத்தை மதுரைக்கு அழைத்துவந்து வைகையாற்றில் எழுந்தருளச் செய்தது. மதுரையில் மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்ட நிகழ்வை சித்திரைக்கு மாற்றியதும், மதுரை அருகேயுள்ள தேனூர் கிராமத்தின் வைகையாற்றில் சித்திரை மாதம் எழுந்தருளிய கள்ளழகரை மதுரைக்கு அழைத்து வந்ததும் சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக திருமலை நாயக்கர் மேற்கொண்ட முதல் முயற்சி எனலாம்.

சுல்தான்களை விரட்டிய நாயக்கர்கள்: சித்திரை மாதத்தின் முதல் பாதி நாட்கள் சைவத் திருவிழாவாகவும், அடுத்து வருகின்ற நாட்கள் வைணவத் திருவிழாவாகவும், வைகையின் தெற்கு மற்றும் வடகரையில் இப்போதும் நடைபெற்று வருவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சில காலங்கள், ஹைதர் அலி, டெல்லி சுல்தான்கள், மதுரை சுல்தான்கள், மாலிக்காபூர் உள்ளிட்ட இஸ்லாமியர்களின் ஆளுகையில் மதுரை இருந்தது. அப்போது இங்கிருந்த கோயில்கள் கொள்ளைடிக்கப்பட்டன. பிறகு விஜயநகரப் பேரரசு உருவானபோது, சுல்தான்களை விரட்டியவர்கள், நாயக்கர்கள்.

நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டாலும், மதுரையில் வாழ்ந்த இஸ்லாமிய பொதுமக்களின் சினத்தைத் தணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், கள்ளழகர் வண்டியூரில் இரவு துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார் என்ற புனைவு. சில ஆண்டுகள் முன்பு வரை வண்டியூரில் அழகர் தங்குகின்ற வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு அருகில் இஸ்லாமியர்களும் வாணவேடிக்கைகள் நிகழ்த்தி இந்த நிகழ்வில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுபோன்ற வாணவேடிக்கைகள் இப்போதும் நடைபெற்று வருகின்றன.

அழகரோடு கைகோர்க்கும் இஸ்லாம்: இது போன்ற துலுக்க நாச்சியார் புனைவு ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சில வைணவத் தலங்களில் இன்றும் வழங்கப்படுகிறது. புனைவாக இருந்தாலும்கூட சமய நல்லிணக்கத்திற்கான நல் முயற்சி என்றே இதனைப் பார்க்கலாம். சைவ, வைணவம் மட்டுமன்றி, இஸ்லாமும் அழகரோடு கைகோர்க்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒருமைப்பாடாகும். மேலும் அழகர் திருவிழா ஊர்வலத்தில் கலந்து கொள்வோரில் பெரும்பான்மையினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள்.

அவர்களோடு, இடையர் என்றழைக்கப்படுகின்ற கோனார் சாதியரும், கள்ளர் சாதியரும், வலையரும் பங்கேற்கின்றனர். மேலும் கோனார், பட்டியலினத்தோர், கள்ளர் சாதியர் மட்டுமன்றி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சாதியாரும் அழகர் வேடமிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்கோயிலோடு தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவராகவே உள்ளனர். அழகர்கோயில் சார்ந்து நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் இதனை நேரடியாகவே காண இயலும் என்கிறார், வரலாற்றறிஞர் தொ. பரமசிவன்.

அலங்காரப் பிரியர் அழகர்

சாதியின்றி ஒன்றுசேரும் மக்கள்: மேலும் அவர், இந்த மண்ணில் காலூன்ற வைணவம், நாட்டுப்புற மக்களிடையே தனது செல்வாக்கைச் செலுத்த இந்த உத்தியைப் பயன்படுத்திக் கொண்டது என்கிறார். நெற்றியில் திருநாமமிட்டு, முழங்காலுக்கு சற்று கீழ் வரை காங்கு எனப்படும் கறுப்பு உடை தரித்து, காலில் சலங்கை கட்டி, துருத்திப் பையில் நிரப்பப்பட்ட தண்ணீரை பக்தர்கள் மீது பீய்ச்சியவாறே கள்ளழகர் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை அனைத்து சாதியரும் செய்கின்றனர். இதுஅழகருக்கு மாலையிட்டு விரதமிருந்து மேற்கொள்ள வேண்டிய நேர்த்திக்கடனாகும்.

கள்ளழகர் மதுரை வருகை தந்து வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில், சாதி, சமயம், மொழி, இன வேறுபாடுகள் களைந்து லட்சக்கணக்கில் ஒன்றுகூடுவதுதான் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கியக் கூறாகும்.

இதையும் படிங்க: 'கள்ளழகரின் தங்கக் குதிரை தயார்...': மதுரையில் களை கட்டும் சித்திரை திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.