ETV Bharat / state

மதுரையின் புதிய அடையாளம் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' - சிறப்பம்சங்கள் என்ன? - அரசுக்குத் தேர்வர்கள் கோரிக்கை

குழந்தைகள், பெண்களுக்கான சிறப்புப் பிரிவுகளோடு ஒலி-ஒளி காட்சி அறையுடன் ரூ.130.75 கோடி பிரம்மாண்டமாய் மதுரையின் மற்றொரு அடையாளமாக உருவாகியுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

story_kalaingnar_library
மதுரையில் திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் கலைஞர் நூலகம்
author img

By

Published : Jul 4, 2023, 3:11 PM IST

Updated : Jul 15, 2023, 2:47 PM IST

கலக்கலாக தயாராகும் கலைஞர் நினைவு நூலகம்; மதுரையின் அடையாளமாக மாறுகிறது!

மதுரை: தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948-ன் அடிப்படையில், பொதுமக்கள் பயன்படுத்துவதற்கென்றே நூலகங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் அவற்றின் சேவையையும் தரத்தையும் மேம்படுத்தும் வகையில், கடந்த 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த இயக்ககத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்ட மைய நூலகங்கள், 314 முழு நேரக்கிளை நூலகங்கள், 1612 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 ஊர்ப்புற நூலகங்கள், 761 பகுதி நேர நூலகங்கள் ஆகியவற்றோடு, கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் என மொத்தம் 4 ஆயிரத்து 640 நூலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த எண்ணிக்கையில் மேலும் ஒன்றாக மதுரை புது நத்தம் சாலையில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. மொழி மற்றும் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மதுரையின் அறிவு அடையாளமாக கலைஞர் நினைவு நூலகம் திகழவிருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள், கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் ரூ.130.75 கோடி செலவில் நிறைவு பெற்றுள்ளது. இந்த நூலகம் 19 ஆயிரத்து 826 சதுர மீட்டரில் அடித்தளம் தவிர மொத்தம் ஆறு தளங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் சராசரியாக 2 ஆயிரத்து 500 ச.மீ-ல் அமைந்துள்ளது.

எக்கச்சக்க வசதிகள்: மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சாய்வுதளங்களுடன், வளைவு படிக்கட்டு, தானியங்கி படிக்கட்டுகளுடன் பயன்படுத்துவோரின் நலனைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடமும், தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், முக்கியப் பிரமுகர்கள் அறை, சொந்த நூல் படிக்கும் பிரிவு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கமும் முதல் தளத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, அறிவியல் உபகரணப் பிரிவு, 2-ஆம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு (குறிப்புதவி), 3-ஆம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, 4-ஆம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பிரிவு இடம் பெற்றுள்ளன. 5-ஆம் தளத்தில் அரிய நூல்கள் பிரிவு, மின் நூலகம், பல்லூடகப் பிரிவு, ஒளி, ஒலி தொகுப்புகள் காட்சியகப்பிரிவு, மின்னுருவாக்கப் பிரிவு, பார்வையற்றோருக்கான மின்நூல் ஒலி நூல் அரங்கம், 6-ஆம் தளத்தில் நூல் பகுப்பாய்வு நூற்பட்ட தயாரித்தல் பிரிவு, நூலக நிர்வாகப் பிரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர்கள் உணவருந்தும் அறை என அமைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் இலவச பயிற்சி வழங்க வேண்டும்: கலைஞர் நூலகம் குறித்து அமெரிக்கன் கல்லூரி மாணவர் ஜஸ்வந்த் கூறுகையில், “டிஎன்பிஸ்சி சார்ந்த நூல்களுக்கு மட்டும் கலைஞர் நூலகத்தில் முக்கியத்துவம் அளிக்காமல், மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், அதற்கான நூல்கள் இடம் பெற வேண்டும். மத்திய அரசுப் பணித் தேர்வுகளை எழுதுவதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுபோக மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளும் அந்நூலகத்தில் வழங்க ஏற்பாடு செய்தால் மிக சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசுத் தேர்வுகளுக்கான புத்தகங்கள் தமிழில் இடம்பெற வேண்டும்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் வினோத் கூறுகையில், “மதுரை மாநகராட்சி மற்றும் மாநகராட்சி நீச்சல் குளம் அருகேயுள்ள திறந்த வெளி படிப்பகங்களில் நிறைய பேர் போட்டித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான நூல்கள் அதிகமாக வைக்கப்பட வேண்டும்.

மேலும், தமிழ் அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான நூல்கள் மிகவும் அவசியம். தமிழ் இலக்கணம் சார்ந்த நூலகங்கள் நிறைய வேண்டும். டிஆர்பி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கணக்கு, பொருளாதாரம் சார்ந்த பாடங்களுக்கு கல்லூரி, பள்ளி அளவிலான நூல்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றால் நல்லது. எஸ்எஸ்சி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உருவாகி வரும் நிலையில், அவற்றுக்கான தமிழ் நூல்கள் கலைஞர் நூலகத்தில் இடம் பெற வேண்டும்.

எஸ்எஸ்சி, சிஆர்பிஎப் மற்றும் ஆர்ஆர்பி தேர்வுகள் எல்லாம் தமிழில் இடம் பெறத் துவங்கியுள்ளது என்பதால் அதற்கான நூல்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் புரிந்து படிக்க வாய்ப்பு ஏற்படும். அதேபோன்று மாணவர்கள் படிப்பதற்கேற்ற இடவசதியும், தேவையான பயிற்சிகளும் அடிக்கடி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். ரீஸனிங், ஆப்டிட்யூட் போன்ற நூல்களெல்லாம் தமிழில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

ஊரகப்பகுதியில் உள்ள நூலகங்களை மேம்படுத்த வேண்டும்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் நாகராஜ் கூறுகையில், “கலைஞர் நூலகம் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். மதுரையைப் பொறுத்தவரை படிப்பதற்கான வசதிகள் பரவலாகவே உண்டு. வாசிப்பகங்கள், நூலகங்கள் என முன்னரே உள்ளன. தற்போது புதிய நூலகத்தையும் வரவேற்கிறோம்.

ஆனால், மிக நீண்ட நாட்களாகவே நாங்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான தேர்வுகளையும் எழுதியுள்ளோம். ஆனால், அதற்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனும்போது வேதனையாக உள்ளது. தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து எங்களுக்கான நாட்களும் கடந்து செல்கின்றன. தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருப்பதை எங்கள் குடும்பங்களும் எவ்வாறு தாங்கும்? இதற்காக நாங்கள் தற்காலிக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. இதனால் படிப்பு பாதிப்புக்கு ஆளாகிறது.

படித்தோம், தேர்வெழுதினோம், தேர்ச்சி பெற்றோம், வேலைக்குச் சென்றோம் என்று இருந்தால் எங்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படும். எங்களைப் பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வருவோருக்கும் நம்பிக்கை உருவாகும். அண்மையில் குரூப் 4 எழுதினோம். ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும்கூட சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கவுன்சிலிங்குக்கும் இதுவரை அழைக்கப்படவில்லை. அடுத்த நோட்டிபிகேஷன் எப்போது வெளியாகும் என்பதும் தெரியவில்லை. இதற்காகப் படித்துக் கொண்டிருக்கின்ற நாங்கள் பாதிப்புக்கு ஆளாகிறோம். பிறகு கலைஞர் நூலகம் மட்டும் திறந்து என்ன பயன்?

அனைத்து வசதிகளும் நிறைந்த மதுரையில் நூலகம் திறக்கிறீர்கள். ஆனால், ஊரகப்பகுதியில் உள்ள நூலகங்கள் எல்லாம் பராமரிப்பே இல்லாமல் கிடக்கின்றன. மேலும் அங்குள்ள மாணவர்களுக்குத் தேவையான நூல்கள் கிடையாது. அதுமட்டுமன்றி, இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து படிப்பதற்கான பொருளாதார வசதியும் அவர்களிடம் கிடையாது. ஆகையால், ஊரகப் பகுதியில் உள்ள நூலகங்களை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு முன் வர வேண்டும்.

சில நூலகங்களில் படிக்கிற வசதி உண்டு. ஆனால் கழிப்பறை வசதி இல்லை. கலைஞர் நூலகத்திற்காக செலவு செய்த நிதியில் 10 விழுக்காடு முன்னரே உள்ள நூலகங்களின் மேம்பாட்டிற்கும் செய்திருந்தால் நன்றாக இருக்கும். படித்து வேலைக்குச் செல்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், குறைந்தபட்சம் அவர்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளவாவது ஒரு வாய்ப்பாக இருக்கும் என விரும்புகிறேன். அரசுப் பணியிடங்களுக்கான நோட்டிபிகேஷன்கள் விரைவாக வெளியிட்டால், படிக்கக்கூடிய எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: Tenkasi News - தமிழ்நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலரைக் காண ஆர்வமுடன் வரும் மலையாளிகள்

Last Updated : Jul 15, 2023, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.