மதுரை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மதுரை மலர்ச் சந்தையில் மல்லிகையின் விலை கிலோ ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இது இந்த ஆண்டின் உச்சபட்ச விலை உயர்வாகும். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் பூக்களின் விளைச்சல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள மலர்ச்சந்தையில் விற்பனைக்கு வருகின்ற அனைத்துப் பூக்களும் கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை மல்லியின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
அனைத்துப் பூக்களின் விலையும் ஏற்றமும்:
நேற்றுவரை அதிகப்பட்சமாக ரூ.2500-க்கு விற்பனையான மதுரை மல்லிகையின் விலை, இன்று திடீரென ரூ.4 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதேபோன்று ரூ.800-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ, இன்று கிலோ ரூ.1500-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.1200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சம்பங்கி கிலோ ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பிற அனைத்துப் பூக்களின் விலைகளும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன.
இந்நிலையில், மழை காரணமாக கனகாம்பரம் பூவின் விளைச்சல் இல்லாததால், கனகாம்பரம் வரத்து முற்றிலும் இல்லாத நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க:ரஜினிகாந்த் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து மழை!