மதுரை : சுதர்சனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959இன் படி செயல்பட்டு வருகிறது.
இதில் அரசாணை எண் 132 சுற்றுலா, கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த துறை சார்பாக 2021ஆம் ஆண்டின் விதிகள் 17 துணை விதி 3ன் படி இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் வெளியிடப்பட்டு அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையர் அவர்களால் 2022 ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
அரசாணை எண் 132இல் விதிகள் 17துணை விதி 3இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள்.
- பொது மாறுதல் ஒரே அறநிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளித்துறை பணியாளர்கள் தற்போது அவர் பணிபுரியும் அறநிலையத்தின் செயல் அலுவலர் நிலைக்கு ஈடான செயல் அலுவலர் நிலையில் உள்ள மற்றொரு அறநிலையத்திற்கு மாறுதல் செய்து ஆணையரால் உத்தரவிடப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அறநிலையங்களின் பணியாளர் பட்டியல் மண்டல இணை ஆணையரால் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பட்டியலிலிருந்து மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மற்ற அறநிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்படும்.
- பணிபதிகள் செயல் அலுவலர் இல்லாத அறநிலையங்களில் பணியாளர்களை அதற்கு நிகரான வரிவிதிப்பு வருவாய் உள்ள அறநிலையங்களுக்கு மாறுதல் செய்யப்படும். பணிமாறுதல் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நிலைமையில் (Serica Condions) எந்த மாற்றமும் இருக்காது. முதுநிலை, பதவி உயர்வு ஆகியவை அவர் முதன்முதலில் நியமனம் செய்யப்பட்ட திருக்கோயிலில் தொடர்ந்து பெறத் தகுதியுடையவர்.
- பணிமாறுதல் செய்யப்பட்ட பணியாளர் மீது சட்டப்பிரிவு 55இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறநிலையத்தின் அறங்காவலர் குழுவிற்கு அதிகாரமுள்ளது.
பொது மாறுதல் தவிர கீழ்கண்ட காரணங்களால் பணிமாற்றம் செய்யப்படலாம்.
- அதிகமாக உள்ள பணியாளர்களை தேவைப்படும் பிற அறநிலையங்களுக்கு மாறுதல் செய்யலாம்.
- குறிப்பிட்ட பணியில் அனுபவமிக்க பணியாளர்களையும் , தொழில்நுட்ப அறிவு உள்ள பணியாளர்களையும் அவர்களது சேவை தேவைப்படும் பிற அறநிலையங்களுக்கு மாறுதல் செய்யலாம்.
- ஒரு அறநிலையத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சினையினை கையாள அனுபவமிக்க மற்றொரு அறநிலையத்தின் பணியாளரை தற்காலிகமாக மாறுதல் செய்யலாம்.
- அறநிலையங்களில் நிர்வாக ரீதியான ஒழுக்கத்தை நிலை நிறுத்தி பணிமாறுதல் செய்யலாம்.
- வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதற்கு முந்தைய அறுநிலையுத்தில் பணிபுரிந்த காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது போன்ற பல விதிமுறைகள் உள்ளது.
- எனவே, அரசாணை எண் 132 சுற்றுலா, கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த துறை சார்பாக 2021ஆம் ஆண்டின் விதிகள் 17 துணை விதி 3இன் படி இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் வெளியிடப்பட்டு அதற்கான அறிவிப்பினை 2022 ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, இந்த 2021 அரசாணை மற்றும் 2022 அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், மேலும் 2021 அரசாணை மற்றும் 2022 அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் குறித்து 2021 ஆம் ஆண்டு அரசாணை 132 விதிகள் 17 துணை விதி 3 மற்றும் அதற்காக 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கு குறித்து தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம், மதம் துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு