தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், " உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் வசித்து வருகிறேன். நான் கூலிவேலைக்காக சென்ற நிலையில், பக்கத்து வீட்டிலிருந்த 55 வயதான பொன்ராஜ் என்பவர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில், அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். தவறிழைத்த பொன்ராஜின் குடும்பத்தார் பொருளாதாரம், அரசியல் ரீதியாக செல்வாக்கு உடையவர்கள் என்பதால், எனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு கோரி மனு அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, எனது குடும்பத்திற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், எனது மகளின் கருவைக்கலைக்க அனுமதி வழங்குவதோடு, உரிய இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவைக் கலைக்கவும், டி.என்.ஏ பரிசோதனைக்காக கருவை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று ,"18 வயதைக் கடந்த ஆதரவற்ற, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்களை அமைப்பது குறித்து, தமிழ்நாடு முதன்மை செயலாளர், எட்டு வாரத்தில் கொள்கைரீதியான முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் பார்க்க: '21ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்கொடுமைகள்... ஜனநாயக சக்திகளே வெட்கி தலைகுனிக!'