புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எனது மகள் கவுரி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சிறு வயது முதலே கிராமப்புற வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளைச் செய்து உள்ளார்.
அதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பரியத்தையும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளார். குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரி, குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் குழுவை உருவாக்கியது குறித்தும் அவர் விரிவாக ஆய்வு நடத்தி உள்ளார். கிராம புள்ளிவிவர பதிவை ஏற்படுத்தி உள்ளார்.
கிராம ஆட்சியர் பதவி
எனவே மாவட்ட ஆட்சியரைப் போல, கிராம ஆட்சியர் என்ற புதிய பதவியை உருவாக்க வேண்டும். தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை நூலை 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும்.
இந்த 3 திட்டங்களையும் அமல்படுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மனுதாரர் கோரிக்கையானது அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும்" என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், " மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்