ETV Bharat / state

குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் அதிகாரம்: நீதிமன்றம் சொல்வது என்ன? - நீதிமன்றம்

மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறை ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில் தேவையான சட்டத்திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உள்துறைச் செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 9:52 PM IST

மதுரை: குண்டர் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, குண்டர் சட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்தி வரும் நிலையில் அவர்களின் பணிசுமையைக் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்போது அதீத கவனம் தேவை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறை ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில் தேவையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என உள்துறைச்செயலருக்கு உத்தரவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து உள்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14இன் பிரிவு 3 (2)-க்கு திருத்தம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின், பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது எனவும்; இதனால், இந்த உத்தரவின் கீழ் முடிவெடுக்க குறைந்தது நான்கு வார காலங்கள் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சட்ட திருத்தம் மேற்கொள்ள நான்கு வார கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

குண்டர் சட்டம் என்றால் என்ன?: Preventive Detention Act 1950. அதாவது குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் சட்ட நடவடிக்கை என்று கூறலாம். கடந்த 1982ஆம் ஆண்டு தமிழக அரசால் இந்த சட்டத்தின் கீழ் போதைப்பொருள், பாலியல், மணல் திருட்டு, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சில குற்றங்கள் செய்வோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழக திரைத்துறை திருட்டு சீடி மற்றும் வீடியோ இறங்குவதைத் தடுக்கும் நோக்கில் அந்த குற்றத்தை குண்டர் சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து அந்த குற்றமும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை எவ்வித முன் அறிவிப்பு மற்றும் விசாரணை இன்றி சிறையில் தள்ள அதிகாரம் உள்ளது. நகரங்களில் காவல்துறை ஆணையரும் கிராமங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

தவறாக கையாளப்படும் குண்டர் சட்டம்!: இதுகுறித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், 'பல மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற தடுப்புக் காவல் சட்டங்களை நீக்கிவிட்டனர். ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டமே அனுமதிக்கிறது' எனக் கூறியுள்ளார். மேலும், இதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அவர்களை தடுப்புக் காவலில் வைக்கவேண்டும் என்று அரசு சொல்வதால்தான் வேதனை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வளர்மதி, திருமுருகன் காந்தி, சீமான் உள்ளிட்டப் பலர் அரசியல் காரணங்களுக்காக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுவாக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இந்த வழிமுறையைப் பின்பற்றுவது சரியில்லை எனத் தெரிவித்த ஹரிபரந்தாமன் சட்டமே நியாயமானதாக இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அது மட்டுமின்றி, நடைமுறையில் நூற்றுக்கணக்கானவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் அடைப்பது ஜனநாயக விரோதமானது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் Watch பட்டியலில் Rolex-ஐ தொடர்ந்து Panerai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.