மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரேஷ் என்பவர், சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை வைத்திருந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்கோரி அம்பரேஷ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தபோது மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும்; மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னை மாதவரத்தில் கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது: 12 ஆண்டுகள் சிறை