ETV Bharat / state

பணப் பலன்களை வழங்குவதில் சிக்கல்... ஓய்வு பெற்ற DEOக்கு சிறை.. நீதிபதியின் உத்தரவு நிறுத்திவைப்பு! என்ன நடந்தது? - Justice SS Sundar

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

madurai high court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 12:33 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "தான் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும். தனது பணியை வரன்முறை செய்து தனக்கு வரவேண்டிய பண பலன்களையும், பதவி உயர்வுகளையும் முறையாக வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரர் கோரிக்கையை பணி வரன்முறை செய்து உரிய பணப் பலன்களையும் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில் 2020ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து மூன்று வருடங்களாகியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வித்துறை அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி ஜான்சிராணி வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது இரண்டரை ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து பதில் அளிக்க மாவட்ட கல்வி அதிகாரி DEO லச்சுமன சாமி (ஓய்வு) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமண சாமி நேரில் ஆஜராகி, அவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைப் பார்த்த நீதிபதி இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை தற்போது நிறைவேற்றி உள்ளதாக கூறுகிற காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல என்றார். எனவே மாவட்ட கல்வி அதிகாரி நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றும் இதன் மூலம் மாவட்ட கல்வி அதிகாரி நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு தண்டனைக்கு உள்ளாகிறார் எனக் கூறிய நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை நீதிமன்ற பதிவாளர் நிறைவேற்றுவார் எனக் கூறி வழக்கை நீதிபதி முடித்து வைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:அம்பாசமுத்திரம் காவல் நிலைய சித்திரவதை வழக்கு; விசாரணை அறிக்கை கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.