ETV Bharat / state

மாணவிகளை தூண்டி விட்டு பொய் பாலியல் புகார் - போலீசார் எச்சரிக்கை

மாணவிகளை தூண்டி விட்டு சக ஆசிரியர்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுக்க செய்த தலைமையாசிரியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ன
author img

By

Published : Nov 3, 2022, 1:31 PM IST

மதுரை: மதுரை அருகே பள்ளி ஒன்றில், ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக குழந்தைகள் நல உதவி மையத்திற்கு (சைல்டு லைன்) தொலைபேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழு விசாரணை மேற்கொண்டனர்.

புகாருக்கு உள்ளான பெண் ஆசிரியர் ஒருவர் தங்கள் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை நேரில் சந்தித்து முறையிட்டார். ஆசிரியர்களுக்கு இடையிலான விரோத போக்கின் அடிப்படையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மாணவிகளை தூண்டி விட்டு பொய்யான பாலியல் புகார்

இதனையடுத்து ஊமச்சிக்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர். சிறுமிகள் போலீசாரிடம் கூறிய போது, தாங்களாக கடிதத்தை எழுதவில்லை என்றும், தலைமையாசிரியர் கூறியதால் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், உடற்கல்வி ஆசிரியர் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனடிப்படையில் பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப்போக்கின் காரணமாக, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இரண்டு பெண் ஆசிரியர்கள் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, புலனாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அறிக்கை மற்றும் விசாரணை அடிப்படையில் இது பொய்யான குற்றச்சாட்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. சிவ பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறுமிகளை துாண்டிவிட்டு தனது சுயலாபத்திறக்காக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்று போக்சோ சட்டத்தை யாரேனும் தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.