ETV Bharat / state

லே-அவுட்டுகள் வழக்கு: நகரமைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மனையிடங்கள், லே அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி, ஊரக மேம்பாட்டுத் துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jun 24, 2019, 9:44 PM IST

madurai

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ரியல் ஏஜென்ட்கள், புரோக்கர்கள் தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத லே-அவுட்களை உருவாக்கி விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் இதனைத் தீவிரமாக கருத்தில் கொண்டு அணுகிய உயர்நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனையிடங்கள், வரைப்பட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், நிலப்பரப்புகளை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளை முறைப்படுத்துவது சம்பந்தமாக மாநில நகர், ஊரகமைப்பு மேம்பாட்டு துறை இயக்குநர் 2017ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளை வரைமுறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் 16.11.2018இல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக CMDA (அ) DTCP ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. அனைவராலும் CMDA (அ) DTCP அலுவலகத்தை நேரில் அணுக இயலாது. அதில் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளையும் சந்திக்கின்றனர். ஆகவே மனையிடங்கள், லே- அவுட்டுக்ளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர், இது தொடர்பாக மாநில வீட்டு வசதி, ஊரக மேம்பாட்டுத் துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Intro:மனையிடங்கள், லே- அவுட்டுக்ளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மனையிடங்கள், லே- அவுட்டுக்ளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத லே அவுட்களை உருவாக்கி  ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள், புரோக்கர்கள் ஆகியோர் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு பொதுமக்களை மோசடி செய்தனர்.
இதனை தீவிரமாக கருத்தில் கொண்டு அணுகிய உயர்நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனையிடங்கள்,  வரைபட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள், நிலப்பரப்புகளை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத லே அவுட்டுகளை முறைப்படுத்துவது சம்பந்தமாக மாநில நகர் மற்றும் ஊரமைப்புச் அமலாக்கத் துறை இயக்குனர் 2017 அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில் அங்கீகரிக்கப்படாத விளையாட்டுகளை வரைமுறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்திற்கான அத்தாட்சி சான்று வழங்கப்படும். பின்னர் அந்த சொத்து ஆவணங்களை நேரடியாகவோ தபால் மூலமாகவோ அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர் அதிகாரிகள் அது தொடர்பான பகுதி தடை செய்யப்பட்ட பகுதி அல்ல என்பதை உறுதி செய்து, அதனை தொழில்நுட்ப பிரிவு அனுமதிக்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையினருக்கு அனுப்ப வேண்டும். இந்த முறைப்படி தமிழகம் முழுவதும் 35 சவீத அங்கீகரிக்கப்படாத பிளாட்டுகள் லே-அவுட்கள் வரைமுறை செய்யப்பட்டது. மீதமுள்ள 65% அங்கீகரிக்கப்படாத பிளாட்டுகள், லே-அவுட்டுகள் வரைமுறை செய்யப்படவில்லை. இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் 16.11.2018 ல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக CMDA அல்லது DTCP ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நகர் ஊரமைப்பு துறை துறை ஆணையர் 21.2.2019ல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இறுதி தேதியான 3.11. 2018க்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டவையும் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவராலும் CMDA அல்லது DTCP அலுவலகத்தை நேரில் அணுக இயலாது. அதில் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளையும் சந்திக்கின்றனர். ஆன்லைன் பதிவுவசதியை மீண்டும் ஏற்படுத்தாவிட்டால் அனைத்து அங்கீகரிக்கப்படாத லே.அவுட்டுகள், பிளாட்டுகளை முறைபடுத்துவது இயலாத ஒன்று. அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகள் வரைமுறை செய்யப்படாவிட்டால் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற காரணமாக அமையும். இது தொடர்பாக பல்வேறு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மனையிடங்கள், லே- அவுட்டுக்ளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி இது தொடர்பாக மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆரம்பித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.