ETV Bharat / state

தமிழ்நாடு தொல்லியல்துறை பணியிடங்களுக்கு சமஸ்கிருத படிப்பு அவசியமில்லை-நீதிபதிகள்

மதுரை: தமிழ்நாடு தொல்லியல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சமஸ்கிருத படிப்பு அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு - மதுரை நீதிபதிகள்
author img

By

Published : Apr 12, 2019, 10:05 AM IST

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம். பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வுப் பணி 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஏராளன பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இதே போல் தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் என்பவர் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 11) நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில்,"ஆதிச்சநல்லூர் அகழாய்வின் அறிக்கைகளை தயார் செய்ய மேலும் எட்டு மாத கால அவகாசம் தேவை. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க முடியும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடத்தவில்லையெனில் மாநில அரசுகள் ஆய்வை நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ’மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அனுமதி வழங்குவோம்’ என தெரிவித்தார்.

நீதிபதிகள் அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, தொல்லியல்துறையின் தரப்பில், தமிழ்நாட்டில் இதுவரை 26 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஓர் இடத்திற்கான அகழ்வாராய்ச்சி முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மீதம் இருக்கும் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து, தமிழ்நாடு தொல்லியல் துறையில் 35 இடங்களில் 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன. ஆகையால், சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க இயலாது. ஆகவே, தொல்லியல்துறையின் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த  அகழாய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தொல்லியல் துறையின் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன.

 ஆகையால், சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க இயலாது - நீதிபதிகள்

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர்  முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில்,"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம்.  பாண்டிய நாட்டின் தலைநகரான  கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளன பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 

ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 

இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. 

எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இதே போல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் தனி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு  அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

 அதனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்நிலையில், இன்று வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில்   விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில்,"ஆதிச்சநல்லூர் அகழாய்வின் அறிக்கைகளை தயார் செய்ய மேலும் எட்டு மாத கால அவகாசம் தேவை.
அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் முடியும்" என  தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து நீதிபதிகள்," மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடத்தவில்லை எனில் மாநில அரசுகள் ஆய்வை நடத்திக் கொள்ள அனுமதி வழங்குமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.

 இதையடுத்து நீதிபதிகள் அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, தொல்லியல்துறையின் தரப்பில்,

 தமிழகத்தில் இதுவரை 26 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஓர் இடத்திற்கான அகழ்வாராய்ச்சி முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து நீதிபதிகள், மீதி 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த  ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

 தொடர்ந்து மனுதாரர் தரப்பில், தமிழக தொல்லியல் துறையில் 35 இடங்களில் 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 

அதில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பாணையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன.

  ஆகையால், சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க இயலாது.

 ஆகவே, தொல்லியல் துறையின் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.