ETV Bharat / state

மதுரை ராஜாஜி மருத்துவமனை முறைகேடுகளை தட்டிக் கேட்டால் பாலியல் குற்றச்சாட்டா?

author img

By

Published : May 21, 2023, 11:18 AM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைகேடுகளை தட்டிக்கேட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் கூறியுள்ளார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை முறைகேடுகளை தட்டிக் கேட்டால் பாலியல் குற்றச்சாட்டா?
மதுரை ராஜாஜி மருத்துவமனை முறைகேடுகளை தட்டிக் கேட்டால் பாலியல் குற்றச்சாட்டா?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சையது ஜாகிர் உசேன் அளித்த பேட்டி

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை மருத்துவர் எஸ்.சையது ஜாகிர் உசேன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய மருத்துவர் எஸ்.சையது ஜாகிர் உசேன், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறையில் முதுநிலை உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான சட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில பொதுச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறேன். அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட அரசு மருத்துவர்களுக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறேன்.

தமிழ்நாடு மருத்துவத் துறையில் அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். சுகாதாரத்துறை முன்னாள் செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்.

இந்த நிலையில், எனது துறையில் துணை மருத்துவ மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக, என் மீது கடந்த 8ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படாமல், நேரடியாக விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி விசாகா குழு நடத்திய விசாரணையில் நேரடியாக ஆஜராகி, எனது தரப்பு நியாயங்கள் மற்றும் சந்தேகங்களை எடுத்துரைத்தேன்.

ஏனென்றால், விசாகா குழு வரையறுத்துள்ள பாலியல் குற்றங்கள் தொடர்பான எந்த ஆதாரங்களும் என் மீதான புகாரில் இல்லை. எனவே, புகார் அளித்தவர்களை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். புகார் அளித்தவர்களின் கைப்பேசி அழைப்பு விவரங்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்.

மயக்கவியல் துறையில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விசாகா குழுவில் முன் வைத்தேன். எனது நியாயமான கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு கதிர் இயக்கத் துறையில் பணியாற்றிய ஒருவரையும், இதே போன்று பாலியல் குற்றச்சாட்டில் வெளியேற்றினர். அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, நீதிமன்றம் அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்தையும், சுகாதாரத் துறையையும் கண்டித்தது. தற்போது என்னையும் அது போன்று பழி வாங்குகிறார்கள்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைகேடுகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை ஆயுதமாகப் பயன்படுத்தி பழிவாங்கப்படுகின்றனர். என் மீதான நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த உள்ளேன்” என கூறினார்.

மேலும், இது குறித்து மருத்துவமனை முதல்வர் ஏ.ரத்தினவேலுவிடம் கேட்டபோது, “மருத்துவர் சையது ஜாகிர் உசேன் மீது 20க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். பல புகார்கள் எழுத்துப் பூர்வமாக என்னிடம் அளிக்கப்பட்டன.

எனவே, இந்தப் புகார்கள் அனைத்தும் விசாகா குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாகா குழு, மருத்துவர் சையது ஜாகிர் உசேன் மற்றும் புகார் அளித்த மாணவிகள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியரிடம் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் அத்துமீறலில் அவர் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது.

இந்த விசாரணை அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மருத்துவர் சையது ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை.

மருத்துவமனை முதல்வர் என்ற அடிப்படையில் என்னிடம் அளிக்கப்படும் புகார்களை உரிய விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து முறையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். புகார்கள் மீதான நடவடிக்கைகளில் எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4 ஆண்டுகளில் 4,312 பேர் கருக்கலைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.