மதுரை : நத்தம் சாலையில் பேங்க் காலனி அருகே கட்டப்படும் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்த விபத்து ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தபோது இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். கருவிகள் பராமரிப்பு சரியாக நடைபெற்றதா? என்பது குறித்து கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க : சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு