ETV Bharat / state

மதுரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சலசலப்பு - மதுரையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மதுரை: மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்கவில்லை என கூறி கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்த சம்பவம் நடந்துள்ளது.

Breaking News
author img

By

Published : Jan 20, 2021, 1:31 PM IST

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, தெற்கு மதுரை, மத்திய மதுரை, மேற்கு திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் (தனி) தொகுதி ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 363 பெண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 91 ஆண் வாக்காளர்கள் என குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக உள்ளது. மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 564 பேர் பெண் வாக்காளர்களையும், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 643 பேர் ஆண் வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

மதுரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி

இறுதி வாக்காளர் பட்டியலின்படி மதுரை மாவட்டத்தில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 153 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 64 ஆயிரத்து 316 பெண் வாக்காளர்கள், 202 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 பேர் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கருத்தை கேட்டு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது இல்லை என்று குற்றஞ்சாட்டி வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: ’6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.