திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில மூடப்படாத ஆழ்துளைக் கிணறுக்குள் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணர்வு பரப்புரை தமிழ்நாடு அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்ட அறிவிப்பில், "மதுரை மாவட்டத்தில் மூடப்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். அத்துடன் 0452-2546161, எண்ணுக்கும் 97899270122 , 9788869536 என்ற வாட்ஸ் ஆப் எண்களுக்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அதன் அடிப்படையில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அரசு அலுவலர்களின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மதுரை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் தொடர்புள்ள உள்ளாட்சி அமைப்புகளில் உரிய அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை விதிமுறைகளைப் பின்பற்றி ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட வேண்டும். வீதிமுறைகளை மீறி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பதவி விலகினார் லெபனான் பிரதமர்!