கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி பொது இடங்களில் சுற்றவும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் இதனை தீவிரதாக கடைப்பிடித்து வருகின்றன. இருப்பினும், கோவிட்-19 பரவல் குறித்து அச்சமின்றி பலர் தமது வீட்டை விட்டு வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, தேவையின்றி நகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒலிபெருக்கி மூலம் தேவையின்றி சுற்றி திரிபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தும் வருகின்றனர். மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக செல்கிறோம் என்று கூறிக்கொண்டு தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் தடுப்புகள் அமைத்து பிடித்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க :கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவ
ர்