கரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் குறைந்த நபர்களை வைத்து நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற மணமகனுக்கும், தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஹரிதாசெல்வம் என்ற மணமகளுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் திருமண நிகழ்ச்சி மணமகன் வீட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மஞ்சள் கலந்த நீரில் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரசு நடைமுறை படி 30 பேர் மட்டும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு: 15 நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட திருமணம்