ETV Bharat / state

சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு மட்டும் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு! - சுங்க கட்டணம் குறைப்பு

Madras high court madurai bench: தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:25 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வின் ராயன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்கு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH138 அமைந்துள்ளது.

இந்த நான்கு வழிச்சாலை தூத்துக்குடிக்கு போக்குவரத்து பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி விமானை நிலையம் அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடி அமைந்துள்து. இந்த சுங்கச்சாவடியானது தூத்துக்குடியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரமும் நெல்லையில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

தினந்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் மூலம் பலலட்ச ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றை கடக்கிறது.

இந்த சாலை குண்டும் குழியுமாக மிக மோசமானை நிலையில் இருப்பதால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பயணிகளின் பணிவான கவனத்திற்கு: சென்னை சென்ட்ரலில் புறப்படும் சில ரயில்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.