மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டிடத்திற்கு எதிரேயுள்ள பல்நோக்கு மருத்துவமனை தற்போது கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 58 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் மருத்துவமனையின் கீழ் தளத்தில் கரோனோ பரிசோதனை மையமும் செயல்பட்டு வருவதால் நாள்தோறும் மதுரை மாவட்டத்திலிருந்து பொதுமக்களும், கட்டுப்படுத்தபட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கரோனா சோதனைக்காக வரும் நபர்கள் தங்களோடு உறவினர்களையும் அழைத்துவருகின்றனர்.இதனால் மருத்துவமனை முன்பாக அதிக அளவிற்கு பொதுமக்கள் கூடும் நிலை உருவாகியுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளதுடன், அந்த பகுதிகளில் யாரும் தேவையின்றி செல்லக் கூடாது என அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க...காஞ்சியில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்