ETV Bharat / state

இறைச்சிக் கடைகள் மாவட்டம் முழுவதும் பரவலாக திறக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரை : இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க பரவலாக கடைகள் திறக்கப்படுமென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இறைச்சி கடைகள் மாவட்டம் முழுவதும் திறக்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

author img

By

Published : Mar 30, 2020, 10:24 PM IST

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “கூட்டுறவுத் துறை மூலமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்றுக் காரணமாக கூட்டம் கூட கூடாது என்பதற்காக நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அது காலையில் 50 அட்டைதாரர்களுக்கும் மாலையில் 50 அட்டைதாரர்களுக்கும் என பிரித்து வழங்கப்பட உள்ளது.

நிவாரண உதவித் தொகை யாருக்கும் கிடைக்காது என்ற நிலை இல்லை. சிலர் வெளியூரில் இருந்தாலும் அவர்கள் வந்த பின்பு வாங்கிக் கொள்ளலாம். மேலும் பொது விநியோக பொருள்களும் இலவசமாக கிடைக்கும்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு பொருள்களை வீடு வீடாக விநியோகம் செய்வது போல ரேஷன் பொருட்களை நேரில் சென்று வீடு வீடாக கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்கு செல்லத் தேவையில்லை. வீடுகளைத் தேடி காய்கறிகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகள் மாவட்டம் முழுவதும் திறக்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றி வரும் 2,590 ஊழியர்களுக்கு உணவு, அடிப்படை வசதி என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி வாங்குவதற்காக பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பரவலாக இறைச்சிக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த நபரின் வீட்டின் அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எத்தனை வீடுகள் உள்ளது.

இறந்தவர் யாரையெல்லாம் சந்தித்தார், எந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் என்பது குறித்து அவர்களையும் கண்டறிந்து இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறந்தவரின் வீட்டை சுற்றி 30 மேற்பார்வையாளர்கள் 176 பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆதரவற்ற முதியவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் மூலமாக வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துக்கு தேவையான அத்தனை உபகரணங்களும் உள்ளது. முகக் கவசங்கள் கிருமிநாசினிகள் காய்கறிகள் விலை அதிகமாக விற்பது தொடர்பான புகார்கள் அரசு கவனத்துக்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : திடீரென தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.