ETV Bharat / state

வெண்பட்டு பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்! - மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி

வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி, பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் அமர்ந்து கம்பீரமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

madurai-chithirai-thiruvizha-kallalagar-vaigai-river-landing-celebrations வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்.. OR பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து எழுந்தருளினார் கள்ளழகர்
madurai-chithirai-thiruvizha-kallalagar-vaigai-river-landing-celebrationsவைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்.. OR பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து எழுந்தருளினார் கள்ளழகர்
author img

By

Published : Apr 16, 2022, 7:18 AM IST

Updated : Apr 16, 2022, 10:40 AM IST

மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தனர். இதனையடுத்து, மதுரையின் அரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் (ஏப்.14) நடைபெற்றது. இதனையடுத்து, சித்திரை திருவிழாவின் 11ஆம் நாளான (ஏப்.15) அம்மன் மீனாட்சியும் சொக்கநாதரும் மதுரை மாசி வீதிகளை வலம் வரும் தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது.

வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்

அதன்பின், வைகை ஆற்றில் எழுந்தருள திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரை பக்தர்கள் மூன்றுமாவடி அருகே எதிர்கொண்டு வரவேற்றனர். சித்திரைத் திருவிழாவின் 12ஆவது நாளான இன்று (ஏப்.16) காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது.

வெண்பட்டு பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் காலை 5.50 மணிக்கு தொடங்கியது. அப்போது கள்ளழகர் மாண்டூகமாக நின்ற முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி

இந்த ஆண்டு வெண்பட்டு உடுத்தி, பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் அமர்ந்து கள்ளழகர் எழுந்தருளினார். இதன் பொருட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண பெரும் திரளாக கூடியுள்ளனர். மதுரையில் 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மதுரை மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்

இதையும் படிங்க: 'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பு

Last Updated : Apr 16, 2022, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.