ETV Bharat / state

கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு!

மதுரை: செக்காணூரணியில் கட்டுமான பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

கட்டட
author img

By

Published : Jul 8, 2019, 12:45 PM IST

மதுரை செக்காணூரணி பகுதியில் சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிகள் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டடத்தில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர், இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில் காசிநாதன், அருண் குமார், பாலு ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் படுகாயங்களுடன் ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முத்துப்பாண்டி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. மேலும் கார்த்திக், ராஜேஷ், முருகன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Intro:மதுரை அருகே கட்டடம் இடிந்த விபத்தில் மேலும் ஒருவர் இன்று பலி

மதுரை அருகே கட்டடம் இடிந்த விபத்தில் இன்று அதிகாலையில் மேலும் ஒருவர் பலியானார். அந்த சம்பவத்தில் இறந்த நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும் மூவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Body:மதுரை அருகே கட்டடம் இடிந்த விபத்தில் மேலும் ஒருவர் இன்று பலி

மதுரை அருகே கட்டடம் இடிந்த விபத்தில் இன்று அதிகாலையில் மேலும் ஒருவர் பலியானார். அந்த சம்பவத்தில் இறந்த நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும் மூவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அரசினர் கள்ளர் மேல்நிலைப்பள்ளியின் பின்புறமுள்ள பசும்பொன் தெருவில் மாதவன் என்பவருக்கு சொந்தமான கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் மின் இணைப்புப் பணிகளுக்காக சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 7 பேர் அந்தக் கட்டடத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மாலை திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில், பணியாற்றிக் கொண்டிருந்த 7 பணியாளர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் கார்த்திக் (28), ராஜேஷ் (30), முருகன் (36) ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்காவதாக மீட்கப்பட்ட காசிநாதன் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதற்கிடையே இடிபாடுகளின் இடையே சிக்கிக் கொண்ட முத்துப்பாண்டி (32), அருண்குமார் (21), பாலு (55) ஆகியோரை மீட்கும் பணி மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், தென் மண்டல காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மதுரை மாவட்டட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஐந்தாவதாக எஸ்.முத்துப்பாண்டி மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர் மீட்புப் பணி இரவு முழுவதும் நடைபெற்றது. இதில் அருண்குமார், பாலு ஆகியோர் சம்பவ இடத்தில் நள்ளிரவு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேங்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் எஸ்.முத்துப்பாண்டி (32) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதன் மூலம் கட்டட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. மூன்று பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.