பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை விவகாரம்; தமிழக அரசு, ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - pasumpon muthuramalinga thevar statue issue
Pasumpon Muthuramalinga Thevar: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Published : Oct 11, 2023, 6:48 AM IST
மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டதில் முஸ்டக்குறிச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளைக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை வைக்க அனுமதி கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
ஏழே கால் அடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அறக்கட்டளைக்குச் சொந்தமான பட்டா இடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலையை அமைக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை அமைப்பது குறித்து தமிழக அரசு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா: தங்க கவச உரிமை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிப்பு.. மீண்டும் வென்றார் ஈபிஎஸ்!